தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

பான் இந்தியா பட்டத்தை வெறுக்கும் ஹீரோ

‘ஹனுமான்’ என்ற படத்தை தொடர்ந்து ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா படங்களில் ஒன்று, ‘மிராய்’. கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் ‘ஹனுமான்’ தேஜா சஜ்ஜா நடித்திருக்கும் இப்படம், வரும் 12ம் தேதி ரிலீசாகிறது. இப்படம் குறித்து பேசிய தேஜா சஜ்ஜா, ‘என்னை பான் இந்தியா நடிகர் என்று அழைக்க வேண்டாம். தெலுங்கு படங்களை பார்த்து...

‘ஹனுமான்’ என்ற படத்தை தொடர்ந்து ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா படங்களில் ஒன்று, ‘மிராய்’. கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் ‘ஹனுமான்’ தேஜா சஜ்ஜா நடித்திருக்கும் இப்படம், வரும் 12ம் தேதி ரிலீசாகிறது. இப்படம் குறித்து பேசிய தேஜா சஜ்ஜா, ‘என்னை பான் இந்தியா நடிகர் என்று அழைக்க வேண்டாம். தெலுங்கு படங்களை பார்த்து வளர்ந்த நான், இதுவரை தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்துள்ளேன். தொடர்ந்து அதையே செய்வேன். எனவே, யாரும் என்னை அப்படி அழைப்பதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இதில் வில்லனாக மனோஜ் மன்ச்சு, எனது அம்மாவாக ஸ்ரேயா சரண் நடித்துள்ளனர். ஒரு வருடத்தில் சில படங்கள்தான் தியேட்டருக்கு வந்து பார்த்து ரசிக்கும்படி இருக்கின்றன, அந்த வரிசையில் ‘மிராய்’ படம் இருக்கும். மிராய் என்றால், ’எதிர்காலத்தின் நம்பிக்கை’ என்று அர்த்தம்.

படத்தில் இன்னொரு அர்த்தமும் இருக்கிறது. அது ஒரு ட்விஸ்ட் மூலம் தெரியவரும். இப்படத்தை சீனா, ஜப்பான் மொழிகளிலும் வெளியிடுகிறோம். காரணம், இந்திய படங்களுக்கு அங்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது. இதற்கு முன்பு வெளியான ‘ஹனுமான்’ படமும் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வெளியானது. தொடர்ந்து நான் ஃபேண்டஸி படங்களில் நடிப்பதற்கு காரணம், எனக்குள் இருக்கும் குழந்தைத்தனம் இன்னும் மாறவில்லை என்பதுதான். ஃபேண்டஸி படங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதிரடி சண்டைக் காட்சிகளில் நடிப்பதற்காக தாய்லாந்து, பாங்காக்கிற்கு சென்று 20 நாட்கள் விசேஷ பயிற்சி பெற்றேன்’ என்றார். இப்படத்தில் ரித்திகா நாயக் ஹீரோயினாக நடித்துள்ளார்.