வில்லனிடம் கற்றுக்கொண்ட ஹீரோ
அப்பீட் பிக்சர்ஸ் சார்பில் வி.ஆர்.வி.குமார் தயாரிக்க, கவுதமன் கணபதி எழுதி இயக்கியுள்ள படம், ‘சரண்டர்’. இதில் ஹீரோவாக தர்ஷன், ஹீரோயினாக பாடினி குமார், வில்லனாக மன்சூர் அலிகான் மற்றும் லால், சுஜித் சங்கர், முனீஷ்காந்த், ரம்யா ராமகிருஷ்ணன் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 1ம் தேதி திரைக்கு வரும் இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் தர்ஷன் பேசுகையில், ‘இயக்குனர் கவுதமன் கணபதி எப்போதுமே என்னை ஒரு மிகப்பெரிய ஹீரோவை போலவே நடத்தினார். முதல் நாள் படப்பிடிப்பில் அவரே என்னை தேடி வந்து காட்சிகளை பற்றி சொன்னார். கடைசி நாள் வரை என்னை அப்படித்தான் நடத்தினார். என்னை அழகாக காட்டிய கேமராமேனுக்கு நன்றி.
நான் இலங்கையில் இருந்தாலும், மன்சூர் அலிகான் சாரின் படங்களை பார்த்து வளர்ந்திருக்கிறேன். அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். படத்தில் அனைவரும் கடினமாக உழைத்துள்ளோம். சண்டை காட்சி பரபரப்பாக பேசப்படும். வாழ்க்கையில் சில விஷயங்கள் நடக்கும்போதுதான், யார் உண்மையான பிரெண்ட்ஸ்? யார் அப்படி இல்லை என்று தெரியும். நான் சென்னைக்கு வந்ததில் இருந்து என்னை சிலர் நன்றாக கவனித்துக்கொண்டனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. இப்படத்தில் நான் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளேன். அதற்காக கடுமையான உடற்பயிற்சிகள் மேற்கொண்டேன். தொடர்ந்து வித்தியாசமான வேடங்களில் நடிக்க காத்திருக்கிறேன்’ என்றார்.