தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ராஷ்மிகாவை இயக்கும் பாடகியின் கணவர்

‘நேஷனல் கிரஷ்’ என்று அவரது ரசிகர்களால் சொல்லப்படும் ராஷ்மிகா மந்தனா, தீக்‌ஷித் ஷெட்டி ஜோடி சேர்ந்து நடிக்கும் ‘தி கேர்ள்ஃபிரண்ட்’ என்ற படத்தை நடிகர் ராகுல் ரவீந்திரன் கதை எழுதி இயக்குகிறார். காதல் கதை கொண்ட இதன் முதல் பாடலான ‘நதிவே’ தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. ஹேஷம்...

‘நேஷனல் கிரஷ்’ என்று அவரது ரசிகர்களால் சொல்லப்படும் ராஷ்மிகா மந்தனா, தீக்‌ஷித் ஷெட்டி ஜோடி சேர்ந்து நடிக்கும் ‘தி கேர்ள்ஃபிரண்ட்’ என்ற படத்தை நடிகர் ராகுல் ரவீந்திரன் கதை எழுதி இயக்குகிறார். காதல் கதை கொண்ட இதன் முதல் பாடலான ‘நதிவே’ தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. ஹேஷம் அப்துல் வஹாப் இசை அமைத்துள்ளார். தமிழ் பதிப்பு பாடலை கவிஞர் ராகேந்து மவுலி எழுதியுள்ளார். விஸ்வ கிரண் நம்பி நடனப் பயிற்சி அளித்துள்ளார்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இன்னும் ரிலீஸ் தேதியை அறிவிக்கவில்லை. தமிழ் மற்றும் தெலுங்கில் போதிய வரவேற்பு இல்லாததால் பாலிவுட்டில் தஞ்சமடைந்த ராஷ்மிகா மந்தனா, ‘தி கேர்ள்ஃபிரண்ட்’ படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார். பாடகி சின்மயியை காதலித்து திருமணம் செய்தவர் ராகுல் ரவீந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.