10 டிக்கெட்டுக்கு 5 டிக்கெட் இலவசம்
விஜய் கவுரிஷ், ஸ்மேஹா, ஆதர்ஷ் மதிகாந்த், மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா நடித்துள்ள படம், ‘கடுக்கா’. விஜய் கவுரிஷ் புரொடக்ஷன்ஸ், நியாந்த் மீடியா அன்ட் டெக்னாலஜி, மலர் மாரி மூவிஸ் நிறுவனங்களுக்காக கவுரி சங்கர் ரவிச்சந்திரன், ஆனந்த் பொன்னுசாமி தயாரித்துள்ளனர். எஸ்.எஸ்.முருகராசு எழுதி இயக்கியுள்ளார். சதீஷ் குமார் துரைக்கண்ணு ஒளிப்பதிவு செய்ய, கெவின் டெகோஸ்டா இசை அமைத்துள்ளார். எம்.ஜான்சன் நோயல் எடிட்டிங் செய்ய, நிலவை பார்த்திபன் பாடல்கள் எழுதியுள்ளார். ஜி.தனஞ்செயன் வெளியிடுகிறார்.
இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் பேசிய சவுந்தர்ராஜா, ‘மிகச்சிறந்த கருத்தை சொல்லும் ‘கடுக்கா’ படத்தை உருவாக்கிய அனைவருக்கும் வாழ்த்துகள். நான் வெளிநாட்டில் பணியாற்றியபோது, 2 படங்களுக்கு டிக்கெட் எடுத்தால், ஒரு டிக்கெட் இலவசம். அதுபோல் இங்கு சின்ன பட்ஜெட் படங்களுக்கு 10 டிக்கெட் எடுத்தால், 5 டிக்கெட் இலவசம் என்று அறிவித்தால், படத்தின் மீது ஈர்ப்பு வரும். இதுகுறித்து தயாரிப்பாளர்கள் முடிவு செய்ய வேண்டும்’ என்றார்.