தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

அன்று புலி... இன்று யானை...

காமெடி நடிகர்களில் சிலர் ஹீரோக்களாக நடித்து வருகின்றனர். அந்த வரிசையில், புகழ் ஹீரோவாக நடித்த ‘தி ஜூ கீப்பர்’ என்ற படம் திரைக்கு வந்தது. தற்போது மீண்டும் அவர் ஹீரோவாக நடிக்கும் படம், ‘அழகர் யானை’. அப்படத்தில் சிறிய புலியுடன் நடித்த அவர், இதில் 80 அடி உயரம் கொண்ட யானையுடன் நடிக்கிறார். எஸ்.வி...

காமெடி நடிகர்களில் சிலர் ஹீரோக்களாக நடித்து வருகின்றனர். அந்த வரிசையில், புகழ் ஹீரோவாக நடித்த ‘தி ஜூ கீப்பர்’ என்ற படம் திரைக்கு வந்தது. தற்போது மீண்டும் அவர் ஹீரோவாக நடிக்கும் படம், ‘அழகர் யானை’. அப்படத்தில் சிறிய புலியுடன் நடித்த அவர், இதில் 80 அடி உயரம் கொண்ட யானையுடன் நடிக்கிறார். எஸ்.வி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சிவசங்கர், வேலன் தயாரிக்கின்றனர். ‘மரகதக்காடு’ படத்தை இயக்கிய மங்களேஷ்வரன் எழுதி இயக்குகிறார். ‘காடுவெட்டி’ விஸ்மியா, நந்தினி, ஆர்யன், ‘ஆடுகளம்’ முருகதாஸ், குழந்தை நட்சத்திரங்கள் காருண்யா, கோகுல் நடிக்கின்றனர்.

சபா குமார் ஒளிப்பதிவு செய்ய, காந்த் தேவா இசை அமைக்கிறார். அருண் பாரதி, நந்தலாலா, சாரதி பாடல்கள் எழுதுகின்றனர். சாபு ஜோசப் எடிட்டிங் செய்ய, ஜாய் மதி நடனப் பயிற்சி அளிக்கிறார். கேரளா மற்றும் கிருஷ்ணகிரியிலுள்ள மலையடிவாரங்களில் படப்பிடிப்பு நடக்கிறது.