கண்களை இமைக்கவே நேரம் இருக்காது: பிந்து மாதவி
சென்னை: பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் பிந்து மாதவி, தற்போது ஜி.வி.பிரகாஷ் குமார், தேஜு அஸ்வினி, சந்திரிகா ரவி ஆகியோருடன் இணைந்து ‘பிளாக்மெயில்’ என்ற படத்தில் நடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 1ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து அவர் கூறியதாவது: எல்லா திரைக்கலைஞர்களும் தங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் தருணத்தை தேடிக்கொண்டு இருக்கின்றனர்.
பெண்கள் தங்களுக்கான இடத்தை பெற தொடர்ந்து பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். இயக்குனர் மு.மாறன் ‘பிளாக்மெயில்’ படத்தின் கதையை விவரித்தபோது, உடனே அது எனக்குள் ஒரு பிணைப்பை ஏற்படுத்தியது. எனக்காகவே காத்திருந்த கதாபாத்திரத்தை போல் உணர்ந்தேன். உணர்வும், ஆழமும் கலந்து அவர் உருவாக்கிய எனது கேரக்டர், நிஜமாகவே எனக்கு அதிக பொறுப்பை கொடுத்துள்ளது.
முக்கியமான பல கேரக்டர்களுடன் இணைந்து எனது காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஜி.வி.பிரகாஷ் குமார் போன்ற அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் அருமை. தேஜு அஸ்வினி, ஸ்ரீகாந்த் உள்பட பல நடிகர், நடிகைகள் சிறப்பாக நடித்துள்ளனர். படத்தை பார்க்கும் ரசிகர்கள் கண்களை இமைக்கவே மாட்டார்கள். காரணம், இது முழுநீள அதிரடி திரில்லர் படம்.