‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குனருக்கு திருமண பரிசு
தமிழில் பிளாக்பஸ்டர் வெற்றியை வழங்கிய ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்திற்கு இன்று திருமணம் நடக்கிறது. அவர் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துகொள்கிறார். இதை முன்னிட்டு அவருக்கு விலையுயர்ந்த கார் பரிசளிக்கப்பட்டது. இலங்கைவாழ் மக்களின் கதைக்களத்தில், மிக எளிய திரைக்கதையில், மனித உணர்வுகளின் குவியலாக, அசத்தலான ஃபேமிலி எண்டர்டெயினராக, இந்த ஆண்டில் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள், திரையுலகினரை சந்தோஷப்படுத்தி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’.
இதில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக் நடித்தனர். திரைக்கு வந்த ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய மாறுபட்ட கதைக்களங்களில் வெற்றிப் படங்களை எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் வழங்கி வருகிறது. இந்நிறுவனம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை தயாரித்திருந்தது. தற்போது இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், சீயோன் பிலிம்ஸ் சார்பில் சவுந்தர்யா ரஜினிகாந்த், எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் இணைந்து வழங்க, பசிலியான் நஸ்ரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
 
 