தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

444 திரிஷா சொன்ன கணக்கு: தப்பு என கலாய்த்த ரசிகர்கள்

சென்னை: திரிஷா கூறியது: தக் லைஃப் டிரெய்லரை பார்த்ததும் நீங்கள் சிம்புவுக்கு ஜோடி இல்லையா என்கிறார்கள். 2 நிமிட ட்ரெய்லரை தானே பார்த்திருக்கிறீர்கள். 2 மணிநேரம் படத்தை பாருங்கள் புரியும். நான் இந்த விஷயத்தை பெருமையாக பல முறை சொல்லியிருக்கிறேன். நான் மணி சாருடன் 4 படத்தில் வேலை செய்திருக்கிறேன். கமல் சாருடன் 4 படங்கள், ஏ.ஆர். ரஹ்மான் சார் இசையமைத்த நான்கு படங்களில் நடிக்க கொடுத்து வைத்திருக்கிறேன்.

சில படங்கள் எனக்கு ஸ்பெஷலானது. நான் சினிமாவின் மாணவன் என கமல் சார் மீண்டும் மீண்டும் சொல்வார். ஆனால் நான் அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன் என்றார்.

திரிஷா சொன்னதை கேட்ட அவரின் ரசிகர்களோ, கணக்கு தப்பா சொல்றீங்கமா என்கிறார்கள். அதாவது மணிரத்னம் இயக்கத்தில் 4 படங்கள், கமல் ஹாசனுடன் நான்கு படங்கள் என்பது சரி. ரஹ்மான் இசையமைத்த 7 படங்களில் நடித்திருக்கிறீர்கள் திரிஷா என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.