புது நடிகையால் திரிப்தி டிம்ரி, மிருணாள் தாகூருக்கு சிக்கல்
இந்தியில் கடந்த 1ம் தேதி சித்தார்த் சதுர்வேதி, திரிப்தி டிம்ரி நடிப்பில் ‘தடக் 2’ மற்றும் அஜய் தேவ்கன், மிருணாள் தாகூர் நடிப்பில் ‘சன் ஆப் சர்தார் 2’ ஆகிய இரண்டு படங்கள் வெளியானது. தமிழில் கடந்த 2018ம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் இந்தி ரீ மேக் தான் ‘தடக் 2’. மேலும், 2012ம் ஆண்டு வெளியான ‘சன் ஆப் சர்தார்’ என்ற வெற்றி படத்தின் 2ம் பாகமாக ‘சன் ஆப் சர்தார் 2’ வெளியாகியுள்ளது. வெற்றி படங்களின் தொடர்ச்சியாக வெளியான இந்த இரண்டு படங்களும் இம்முறை பாக்ஸ் ஆஃபிஸில் தோல்வியை சந்தித்துள்ளது. காரணம் ஒரு புது நடிகர்களின் படம்.
ஜூலை 18ம் தேதி வெளியான ‘சையரா’ என்ற காதல் படம் 13 நாட்களை கடந்து ஹவுஸ்ஃபுல் ஷோவாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் அஹான் பாண்டே, அநீத் பட்டா என்ற புது முக நடிகர்கள் நடித்துள்ளனர். ‘ஆஷிக் 1’, ‘ஆஷிக் 2’ படங்களுக்கு அடுத்து பெரியளவில் வெற்றிபெற்ற காதல் படமாக ‘சையரா’ மாறியுள்ளது. வெற்றிகரமான 3வது வாரத்தை கடந்துள்ள இப்படத்தால் நடிகை திரிப்தி திம்ரி, மற்றும் மிருணாள் தாகூருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியில் முத்திரை பதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சென்ற இந்த இரண்டு நடிகைகளின் படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் மோசமான வசூலை பெற்று வருகிறது.
இதில் ‘சன் ஆப் சர்தார் 2’ படம் இரண்டு நாட்களில் வெறும் ரூ.14 கோடியும் ‘அனிமல்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து திரிப்தி திம்ரி நடித்திருக்கும் ‘தடக் 2’ இரண்டு நாட்களில் ரூ.6 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. இதனால் திரிப்தி திம்ரி, மற்றும் மிருணாள் தாகூர் பாலிவுட் பயணம் கேள்விக்குறியாகி உள்ளது.