தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

25 ஆண்டுகளை நிறைவு செய்த உதயா

  உதயா, அஜ்மல், யோகி பாபு நடிப்பில் திரைக்கு வந்த படம், ‘அக்யூஸ்ட்’. ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் இணைந்து தயாரித்த இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் திரைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உதயா கூறுகையில், ‘இந்த வெற்றியை ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்’ என்றார். அவர்...

 

உதயா, அஜ்மல், யோகி பாபு நடிப்பில் திரைக்கு வந்த படம், ‘அக்யூஸ்ட்’. ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் இணைந்து தயாரித்த இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் திரைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உதயா கூறுகையில், ‘இந்த வெற்றியை ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்’ என்றார்.

அவர் சினிமாவில் நடிக்க வந்து 25 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி திரைக்கு வந்த ‘திருநெல்வேலி’ என்ற படத்தில் உதயா நடிகராக அறிமுகமானார். ‘அக்யூஸ்ட்’ படத்தை டான்ஸ் மாஸ்டரும், நடிகரும், கன்னடத்தில் பல வெற்றிப் படங்களை இயக்கிய அனுபவம் பெற்றவருமான பிரபு நிவாஸ் இயக்கி இருந்தார். கன்னட நடிகை ஜான்விகா கலகரி, சந்திகா ஹீரோயின்களாக நடித்திருந்தனர்.