தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

உபேந்திரா ஜோடியாக மாலாஸ்ரீ மகள்

பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ள உபேந்திரா, அடுத்து ‘நெக்ஸ்ட் லெவல்’ என்ற பான் இந்தியா படத்தில் நடிக்கிறார். முன்னாள் கன்னட சூப்பர் ஸ்டார் மலாஸ்ரீயின் மகள் ஆராதனா ஹீரோயினாக நடிக்கிறார். தர்ஷனுடன் ‘காடேரா’ என்ற கன்னட படத்தில் அறிமுகமானவர், ஆராதனா. இப்போது இரண்டாவது படத்தில் நடிக்கிறார். தருண் ஸ்டுடியோஸ் சார்பில் தருண் சிவப்பா தயாரிக்க, அரவிந்த் கவுஷிக் இயக்குகிறார்.

ஐதராபாத்தில் தொடக்க விழா நடக்கிறது. பிறகு பெங்களூரு, மும்பை, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. விஎஃப்எக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் இந்தியா மற்றும் கனடாவில் உருவாக்கப்படுகிறது. ‘ஏ’, ‘உபேந்திரா’, ‘ரக்த கண்ணீரு’ போன்ற உபேந்திராவின் கல்ட் கிளாசிக் படங்களின் சாராம்சமும், கதை சொல்லும் பாணியும் ‘நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் இருக்கும் என்று தெரிகிறது. அனூப் கட்டுகரன் ஒளிப்பதிவு செய்கிறார்.