தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

வட்டக்கானல்: விமர்சனம்

கொடைக்கானல் மலையிலுள்ள வட்டக்கானல் பகுதியில் விளையும் போதை காளானை, உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு கள்ளச்சந்தையில் விற்கும் போதை சாம்ராஜ்ய மன்னன் ஆர்.கே.சுரேஷுக்கு வளர்ப்பு மகன்கள் துருவன் மனோ, ‘கபாலி’ விஷ்வந்த், சரத் ஆகியோர் துணை நிற்கின்றனர். ஆர்.கே.சுரேஷை கொல்ல நேரம் பார்த்து காத்திருக்கிறார், ‘ஆடுகளம்’ நரேனின் மனைவி வித்யா பிரதீப். அவர் ஏன் கொல்ல துடிக்கிறார்? போதை காளான் சாம்ராஜ்யத்தை போலீஸ் அழித்ததா என்பது மீதி கதை. கேரக்டருக்கேற்ப நடித்துள்ள துருவன் மனோ, மீனாட்சி கோவிந்தராஜனின் காதலுக்கு ஏங்குவது உருக்கம்.

பிறகு வளர்ப்பு தந்தைக்கு விசுவாசமாக இருந்த குற்ற உணர்வில் தவிப்பது நல்ல திருப்பம். ‘கபாலி’ விஷ்வந்த், சரத், ஆர்.கே.சுரேஷ், வித்யா பிரதீப், ‘ஆடுகளம்’ நரேன், முருகானந்தம், பாடகர் மனோ, ‘வண்ண வண்ண பூக்கள்’ வினோதினி, ஜார்ஜ் விஜய் ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர். சிறப்பாக நடித்துள்ளார். ஆர்.கே.வரதராஜ், தனது திறமையான நடிப்பால் ஈர்க்கிறார். எம்.ஏ.ஆனந்த் ஒளிப்பதிவு கச்சிதம். பாடல்கள், பின்னணி இசையின் மூலம் மாரிஸ் விஜய் பலம் சேர்த்துள்ளார். மனோ வைத்த நம்பிக்கையை மாரிஸ் விஜய் காப்பாற்றியுள்ளார். போதையினால் ஏற்படும் கொடுமைகளை சொல்ல முயன்ற இயக்குனர் பித்தாக் புகழேந்தி, போதை சாம்ராஜ்யத்தை அடைய ஏற்படும் மோதலில் மட்டுமே கவனத்தை செலுத்தியது நெருடுகிறது.