வெற்றிமாறன் பாராட்டிய ‘மெல்லிசை’
விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘வெப்பம் குளிர் மழை’ என்ற படத்தை தயாரித்த ஹேஷ்டேக் எஃப்டிஎஃப்எஸ் புரொடக்ஷன்ஸ், தற்போது ‘மெல்லிசை’ என்ற படத்தை அனைத்து தலைமுறையினரையும் கவரும் வகையில், ‘அன்பு மட்டும் அண்டம் தேடும்’ என்ற டேக்லைனுடன் தயாரித்துள்ளது. திரவ் இயக்கியுள்ள ஃபேமிலி சென்டிமெண்ட் படமான இதன் பர்ஸ்ட் லுக்கை ெவளியிட்டு, படக்குழுவினரை இயக்குனர் வெற்றிமாறன் வாழ்த்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கிஷோர் இன்னும் இளமையாக இருக்கிறார்.
‘அன்பு மட்டும் அண்டம் தேடும்’ என்ற டேக்லைன், படத்தின் கருவை சரியாக பிரதிபலிக்கிறது’ என்றார். தந்தைக்கும், மகளுக்கும் இடையிலான பாசத்தை உணர்வுப்பூர்வமாக பிரதிபலிக்கும் இதில் ‘ஆடுகளம்’ கிஷோர் குமார், அவரது ஜோடியாக சுபத்ரா ராபர்ட் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் தனன்யா, ஜார்ஜ் மரியான், ஹரீஷ் உத்தமன், ஜஸ்வந்த் மணிகண்டன், புரோக்டிவ் பிரபாகர், கண்ணன் பாரதி நடித்துள்ளனர். காதல், லட்சியம், தோல்வி, மீட்பு ஆகிய உணர்வுகளை ‘மெல்லிசை’ படம் பேசுகிறது.
 
 