தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

வீடியோகால் மூலம் படத்தை இயக்கிய இன்ஜினியர்

சென்னை: காந்திமதி பிக்சர்ஸ் சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்துள்ள படம், ‘தடை அதை உடை’. இதில் ‘அங்காடித்தெரு’ மகேஷ், ‘திருக்குறள்’ குணா பாபு, கே.எம்.பாரிவள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது, நாகராஜ், டெல்டா சரவணன் நடித்துள்ளனர். தங்கப்பாண்டியன், சோட்டா மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். அறிவழகன் பாடல்கள் எழுத, சாய் சுந்தர் இசை அமைத்துள்ளார்.

எழுதி பட்டுக்கோட்டை அறிவழகன் முருகேசன் இயக்கியுள்ளார். படம் குறித்து அவர் கூறியதாவது: நான் ஜெர்மனியில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியராக பணியாற்றி, பல லட்ச ரூபாய் சம்பளம் வாங்குகிறேன். சினிமா ஆர்வம் ஏற்பட்ட பிறகு விடுமுறையில் சென்னைக்கு வந்த நான், இப்படத்தை இயக்கியுள்ளேன்.

1990களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகாவில் 50 வருடங்களாக கொத்தடிமையாக இருந்த ஒருவன் தனியாக போராடி, தன் வம்சத்தை கல்விக்கு திருப்பிய உண்மை சம்பவத்தை சொல்லியிருக்கிறேன். சென்சாரில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம், வரும் 31ம் தேதி திரைக்கு வருகிறது. நான் ஜெர்மனி வேலையை விடவில்லை. இந்தியாவில் படமான சில காட்சிகளை வீடியோகால் மூலம் ெஜர்மனியில் 2 லேப்டாப்களின் உதவியுடன் இயக்கினேன்.