தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

தெரியாமலே ஹீரோவாக நடித்த விக்னேஷ்

ஸ்ரீரங்கநாதர் மூவி மேக்கர்ஸ் சார்பில் வியாப்பியன் தேவராஜ், சதா குமரகுரு, தமிழ் சிவலிங்கம் இணைந்து தயாரித்துள்ள படம், ‘சென்ட்ரல்’. பாரதி சிவலிங்கம் எழுதி இயக்கியுள்ள இப்படம் நாளை திரைக்கு வருகிறது. விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையில் நடக்கும் பல்வேறு பிரச்னைகளையும், அவர்களின் மன வலியையும் பற்றி சொல்லும் படமான இதில், ‘காக்கா முட்டை’ விக்னேஷ் கதையின்...

ஸ்ரீரங்கநாதர் மூவி மேக்கர்ஸ் சார்பில் வியாப்பியன் தேவராஜ், சதா குமரகுரு, தமிழ் சிவலிங்கம் இணைந்து தயாரித்துள்ள படம், ‘சென்ட்ரல்’. பாரதி சிவலிங்கம் எழுதி இயக்கியுள்ள இப்படம் நாளை திரைக்கு வருகிறது. விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையில் நடக்கும் பல்வேறு பிரச்னைகளையும், அவர்களின் மன வலியையும் பற்றி சொல்லும் படமான இதில், ‘காக்கா முட்டை’ விக்னேஷ் கதையின் நாயகனாகவும், சோனேஸ்வரி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் பேரரசு, ‘சித்தா’ தர்ஷன், ‘ஆறு’ பாலா, ‘மேதகு’ ராஜா, அன்பு ராணி, கவிநிலவன், ஓம் கணேஷ் நடித்துள்ளனர். ‘காடப்புறா கலைக்குழு’ வினோத் காந்தி ஒளிப்பதிவு செய்ய, இலா இசை அமைத்துள்ளார். விது ஜீவா எடிட்டிங் செய்ய, சேது ரமேஷ் அரங்கம் அமைத்துள்ளர். ஜான் மார்க் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார்.

படம் குறித்து ‘காக்கா முட்டை’ விக்னேஷ் கூறுகையில், ‘இயக்குனர் பாரதி சிவலிங்கம் என்னிடம் கதை சொல்லிவிட்டு, பிறகு 4 வருடங்கள் காணாமல் போய்விட்டார். திடீரென்று ஒருநாள் மீண்டும் பேசினார். அப்போதுதான் எனக்கு முழு கதையும் ஞாபகத்துக்கு வந்தது. அந்தளவு கதை எனக்கு பிடித்திருந்தது. படத்தின் ஷூட்டிங்கில் பல சிரமங்களை கொடுத்தனர். அதுபற்றி எல்லாம் நான் பேச மாட்டேன். எல்லாமே படத்தின் வெற்றிக்காகத்தான். இந்த படத்துக்கு நான் ஹீரோ என்று சொல்கின்றனர். ஆனால், என்னிடம் யாரும் சொன்னது இல்லை’ என்றார்.