தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

தனி உலகத்தில் சஞ்சரிக்கும் விஜய்

கவுதம் தின்னூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சத்யதேவ், பாக்ய போர்ஸ் நடித்துள்ள பான் இந்தியா படம், ‘கிங்டம்’. கரா ஸ்டுடியோஸ் வழங்க, சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் எஸ்.நாகவம்சி, சாய் சவுஜன்யா இணைந்து தயாரித்துள்ளனர். நவீன் நூலி எடிட்டிங் செய்ய, அனிருத் இசை அமைத்துள்ளார். ஜோமன் டி.ஜான், கிரீஷ் கங்காதரன் இணைந்து...

கவுதம் தின்னூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சத்யதேவ், பாக்ய போர்ஸ் நடித்துள்ள பான் இந்தியா படம், ‘கிங்டம்’. கரா ஸ்டுடியோஸ் வழங்க, சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் எஸ்.நாகவம்சி, சாய் சவுஜன்யா இணைந்து தயாரித்துள்ளனர். நவீன் நூலி எடிட்டிங் செய்ய, அனிருத் இசை அமைத்துள்ளார். ஜோமன் டி.ஜான், கிரீஷ் கங்காதரன் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். படக்குழு கூறுகையில், ’இது நாங்கள் மிகவும் விரும்பி உருவாக்கிய ஒரு உலகம்.

ஒவ்வொரு ஃபிரேமும் ரசிகர்களுக்கு மறக்க முடியாததாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு, மிகவும் வித்தியாசமான அரங்குகளுடன் உருவாக்கினோம். மறக்க முடியாத ஒரு நாளாக, வரும் ஜூலை 31ம் தேதி இருக்கும். அன்றுதான் படம் உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாகிறது. விஜய் தேவரகொண்டாவின் பயணத்தில் இது ஒரு மறக்க முடியாத படமாக இருக்கும்’ என்றது.