சிம்புவுடன் இணையும் விஜய் சேதுபதி
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம், ‘அரசன்’. இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சில நாட்களுக்கு முன் இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது. ‘வடசென்னை’ படத்தின் கதைக்களத்தை பின்னணியாக கொண்டு இப்படம் உருவாவதாக வெற்றிமாறன் தெரிவித்திருந்தார். அனிருத் இசை அமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். ‘விடுதலை’ படத்தின் 2 பாகங்களுக்கு பிறகு மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.
‘செக்கச்சிவந்த வானம்’ என்ற படத்துக்கு பிறகு சிம்பு, விஜய் சேதுபதி மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தில் ‘வட சென்னை’ படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்த அனைவரும் நடிக்கின்றனர். ஒரேகட்டமாக படப்பிடிப்பு நடத்தி திட்டமிடப்பட்டுள்ளது.
