விஜய் தேவரகொண்டா படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்: ராஷ்மிகா நெகிழ்ச்சி
ஐதராபாத்: கன்னடத்தில் நடித்து வந்த ராஷ்மிகா மந்தனா, 2018ல் தெலுங்கில் வெளியான ‘கீத கோவிந்தம்’ என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்தார். அவர்களது லவ் கெமிஸ்ட்ரி நன்கு ஒர்க்கவுட்டான நிலையில், ரசிகர்களும் இந்த ஜோடியை வரவேற்றனர். 2019ல் வெளியான ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் மீண்டும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஜோடி சேர்ந்தனர். அப்போது முதல் அவர்களை பற்றிய காதல் வதந்திகள் பரவி வருகின்றன. இருவரும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், அடுத்த ஆண்டில் அவர்கள் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட பதிவில், ‘கடந்த 7 வருடங்களுக்கு முன்பு எடுத்த போட்டோக்கள் அனைத்தும் என்னிடம் இருக்கிறது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. ‘கீத கோவிந்தம்’ எனக்கு எப்போதும் ரொம்ப ஸ்பெஷலான படமாக இருக்கும். படத்தின் மேக்கிங்கில் ஈடுபட்ட அனைவரையும் நான் நினைத்துக்கொண்டே இருந்தேன். நாம் அனைவரும் நேரில் சந்தித்து பேசி நீண்ட நாட்களாகி விட்டது. ஆனால், அனைவரும் சூப்பராகவும், ஆரோக்கியமாகவும் இருப்பார்கள் என்று நம்புகிறேன். ‘கீத கோவிந்தம்’ படம் வெளியாகி 7 வருடங்களாகிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவு வைரலாகி வருகிறது.