விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா ராசி தான் காரணம்: ரசிகர்கள் ஷாக் விமர்சனம்
ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகாவுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து புட்டபர்த்தி சாய்பாபா கோயிலுக்கு சென்று ஐதராபாத் திரும்பி வந்தகொண்டிருந்தார் விஜய் தேவரகொண்டா. அப்போது அவரின் லெக்சஸ் கார் விபத்தில் சிக்கியது. விஜய் வந்த பாதையில் இரவு 3 மணி அளவில் மஹிந்திரா பொலிரோ கார் ஒன்று திடீரென்று வலப்பக்கம் திரும்பியபோது தான் இந்த விபத்து ஏற்பட்டது. அப்போது காரில் விஜய் தேவரகொண்டா மற்றும் இரண்டு பேர் இருந்தார்கள். இதில் விஜய் தேவரகொண்டா படுகாயம் அடைந்தார். இந்நிலையில் ரஷ்மிகாவின் ராசி பற்றி தேவையில்லாமல் பேச்சு கிளம்பியிருக்கிறது.
ரஷ்மிகாவுடன் நிச்சயதார்த்தம் நடந்ததற்கே விஜய் தேவரகொண்டா கார் விபத்தில் சிக்கிவிட்டார். இதில் திருமணம் வேறு நடந்தால் என்னவெல்லாம் நடக்குமோ என்று விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் சிலர் சோஷியல் மீடியாவில் பேசுகிறார்கள். ஏதோ ஒரு பொலிரோ கார் திடீரென்று திரும்பியதால் விபத்து ஏற்பட அதற்கு ரஷ்மிகாவின் ராசி தான் காரணம் என்று பழிபோடுவது நியாயமே இல்லை என ராஷ்மிகா ரசிகர்கள் கூறுகிறார்கள். ஏற்கனவே கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியை நிச்சயதார்த்தம் செய்து அந்த உறவை ராஷ்மிகா முறித்தார். இந்த திருமணத்தையும் ரஷ்மிகா நிறுத்திவிடுவார் பாருங்களேன் என்று சிலர் சமூக வலைதளங்களில் தெரிவித்தார்கள்.