தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

கிராமத்து பின்னணியில் அறுவடை

சென்னை: ‘லாரா’ தயாரிப்பாளர் கார்த்திகேசன் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் தயாரித்து இயக்குவதுடன் அறுவடை படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா அண்மையில் கோவையில் நடைபெற்றதுடன் படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது. இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. ‘அறுவடை’ திரைப்படத்தில் கதாநாயகியாக சிம்ரன் ராஜ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார் .மேலும் ராஜசிம்மன், கஜராஜ், அனுபராமி கவிதா, தீபா பாஸ்கர், நடிக்கிறார்கள். ஆனந்த், ஒளிப்பதிவு. ரகு ஸ்ரவண் குமார், இசை. படத்தொகுப்பு, கே .கே . விக்னேஷ். பாடல்கள், கார்த்திக் நேத்தா, கார்த்திகேசன், கானா சக்தி. ‘அறுவடை’ முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் கிராமத்து மண்ணையும், மனிதர்களையும், அவர்களது வாழ்வியலையும், பல விதப்பட்ட மனிதஉணர்வுகளையும் பதிவு செய்யும் படமாக உருவாகி வருகிறது.