தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

வித்தியாசமான வில்லன்: ஆர்.கே.வி. ஆசை

சென்னை: ‘ஜெய்ஹிந்த்’, ‘மாண்புமிகு மாணவன்’, ‘குடும்ப சங்கிலி’, ‘சூரிய பார்வை’, ‘அக்கரன்’, ‘திரி ரோசஸ்’, ‘ஹரிதாஸ்’ படங்களில் வில்லன் வேடங்களில் நடித்தவர் ஆர்.கே.வி என்கிற ஆர்.கே.வரதராஜ்.

அவர் கூறும்போது, ‘‘ரஜினி, கமல் போல் வசனங்கள் பேசி சினிமாவில் சிறு வேடங்களில் நடித்து வந்தேன். சிம்பு, தனுஷ் போன்ற இளம் ஹீரோக்களுக்கு வில்லனாக நடிக்க ஆசைப்படுகிறேன். வித்தியாசமான வில்லன் கேரக்டர்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்’’ என்றார்.

எம்.பி.ஆர். பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் ஸ்கை லைன் சினிமாஸ் இணைந்து தயாரித்து, அறிமுக இயக்குநர் பித்தாக் புகழேந்தி இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள வட்டக்கானல் படத்தில் துருவன் மனோ மற்றும் ஆர்.கே. சுரேஷ் நடித்துள்ளனர். இப்படத்தில் முக்கிய ரோலில் ஆர்..கே. வரதராஜ் நடித்துள்ளார். அவரது வித்தியாசமான தோற்றம் மற்றும் வில்லத்தனமான நடிப்பு சினிமாவில் பெரிய அளவில் பேசப்படும் என்கின்றனர் படக்குழுவினர். ஏற்கெனவே பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும் வட்டக்கானல் திரைப்படம் தனக்கு பெரிய திருப்பு முனையாக இருக்கும் எனக் கூறும் ஆர்.கே.வி, அடுத்து 2 தமிழ் படங்களில் நடிக்க இருக்கிறார்.