விமல் நடிக்கும் ஓம் காளி ஜெய் காளி
சென்னை: விமல், சீமா பிஸ்வாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, ஜி.எம்.குமார், குமரவேல், கஞ்சா கருப்பு, புகழ், பாவ்னி, ஷிவின், க்வின்சி நடித்திருக்கும் படம், ‘ஓம் காளி ஜெய் காளி’. ராமு செல்லப்பா, குமரவேல் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். கார்த்திக் ராஜா இசை அமைக்க, மணி அமுதவன் பாடல்கள் எழுதியுள்ளார். பழிவாங்குதல் மற்றும் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாகியுள்ள...
சென்னை: விமல், சீமா பிஸ்வாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, ஜி.எம்.குமார், குமரவேல், கஞ்சா கருப்பு, புகழ், பாவ்னி, ஷிவின், க்வின்சி நடித்திருக்கும் படம், ‘ஓம் காளி ஜெய் காளி’. ராமு செல்லப்பா, குமரவேல் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். கார்த்திக் ராஜா இசை அமைக்க, மணி அமுதவன் பாடல்கள் எழுதியுள்ளார். பழிவாங்குதல் மற்றும் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாகியுள்ள இதில், சக்திவாய்ந்த காளி அவதாரத்தில் விமல் நடித்துள்ளார்.
அநீதிக்கும், நீதிக்கும் இடையிலான இப்பயணத்தில், அவரது காளி அவதாரம் ரசிகர்களை நிச்சயமாக கவரும். குலசேகரபட்டினத்தில் நடந்த தசரா திருவிழாவில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ராமு செல்லப்பா வசனம் எழுதியுள்ளார். இப்படம் நேரடியாக ஜியோ ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி, இந்தி ஆகிய ஏழு மொழிகளில் ஒளிபரப்பாகிறது.