தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

விமல் ஜோடியாக சிருஷ்டி டாங்கே

சென்னை: கடந்த 2023ல் வெளியான கிரைம் திரில்லர் படம், ‘இராக்கதன்’. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு மருதம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் செல்வராஜூ, ராணி ஹென்றி சாமுவேல் இணைந்து தயாரிக்கும் ‘மகாசேனா’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. தினேஷ் கலைச்செல்வன் கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி இயக்குகிறார். விமல் ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். முக்கிய வேடங்களில் யோகி பாபு, மகிமா குப்தா, ஜான் விஜய், கபீர் துஹான் சிங், ஆல்பிரெட் ஜோஸ், இலக்கியா, விஜய் சீயோன் நடிக்கின்றனர். சேனா என்ற யானை முக்கிய வேடத்தில் நடிக்கிறது.

பாடல்களுக்கு ஏ.பிரவீன் குமார், எஸ்.என்.அருணகிரி இணைந்து இசை அமைக்கின்றனர். உதயபிரகாஷ் பின்னணி இசை அமைக்கிறார். டி.ஆர்.மனஸ் பாபு ஒளிப்பதிவு செய்ய, ராம்குமார் சண்டைப் பயிற்சி அளிக்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் எடிட்டிங் செய்ய, வி.எஸ்.தினேஷ் குமார் அரங்கம் அமைக்கிறார். தஸ்தா, அமீர் நடனப் பயிற்சி அளிக்கின்றனர். மனித பேராசைக்கும், தெய்வீக இயற்கை சக்தி களுக்கும் இடையிலான மோதலை பற்றி சொல்லும் இப்படத்தின் படப்பிடிப்பு கூடலூர், வயநாடு, கொல்லிமலை, ஊட்டியில் நடக்கிறது.