தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

விஷால் படப்பிடிப்பில் இருந்து இயக்குனர் வெளிநடப்பு: பரபரப்பு சம்பவம்

சென்னை: அதர்வா நடித்த ‘ஈட்டி’ படத்தை இயக்கியவர் ரவி அரசு. இவர் அடுத்ததாக இயக்கும் ‘மகுடம்’ படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். துஷாரா விஜயன் ஹீரோயின். முக்கிய வேடங்களில் அஞ்சலி, யோகி பாபு நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் ரவி அரசுவின் உதவி இயக்குனர்கள்...

சென்னை: அதர்வா நடித்த ‘ஈட்டி’ படத்தை இயக்கியவர் ரவி அரசு. இவர் அடுத்ததாக இயக்கும் ‘மகுடம்’ படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். துஷாரா விஜயன் ஹீரோயின். முக்கிய வேடங்களில் அஞ்சலி, யோகி பாபு நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் ரவி அரசுவின் உதவி இயக்குனர்கள் சிலருக்கும் படக்குழுவை சேர்ந்த ஒருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

உதவி இயக்குனர்களுக்கு ஆதரவாக ரவி அரசு பேசியிருக்கிறார். இதில் வாக்குவாதம் முற்றியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ரவி அரசுவும் அவரது உதவி இயக்குனர்களும் படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியேறி விட்டனர். இதையடுத்து படமாக்க வேண்டிய காட்சிகளை விஷாலே அன்றைய தினம் படமாக்கினாராம். பிறகு மறுநாள் ரவி அரசுவிடம் விஷால் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். பிரச்னைக்கு காரணமானவரிடம் பேசி, இரு தரப்பையும் சமாதானப்படுத்தினாராம். இதையடுத்து ரவி அரசு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு படத்தை இயக்கி வருகிறார். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.