விஜே சித்து நடித்து இயக்கும் டயங்கரம்
சென்னை: வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில், டிஜிட்டல் திரை நட்சத்திரமும், ‘டிராகன்’ என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடம் பரிச்சயமானவருமான விஜே சித்து கதையின் நாயகனாக நடித்து இயக்கும் படம், ‘டயங்கரம்’. முக்கிய வேடங்களில் நட்டி நட்ராஜ், காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான், ஆதித்யா கதிர் நடிக்கின்றனர். பி.தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, சித்து குமார் இசை அமைக்கிறார். பிரதீப் ஈ.ராகவ் எடிட்டிங் செய்ய, அசார் நடனப் பயிற்சி அளிக்கிறார். படத்தின் இசையை வேல்ஸ் மியூசிக் இண்டர்நேஷனல் வெளியிடுகிறது. இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது.
