தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

வயநாடு நிலச்சரிவு; சிரஞ்சீவி, ராம்சரண் ; ரூ.1 கோடி நிவாரணம்

திருமலை: வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகர் சிரஞ்சீவி ரூ.1 கோடி நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மலைபிரதேசங்களில் மண் சரிவு, மழை வெள்ளம் ஆகியவற்றால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக வயநாட்டில்...

திருமலை: வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகர் சிரஞ்சீவி ரூ.1 கோடி நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மலைபிரதேசங்களில் மண் சரிவு, மழை வெள்ளம் ஆகியவற்றால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நானும் என் மகன் (நடிகர்) சரண் ஆகியோர் இணைந்து கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியை வழங்குகிறோம். வலியில் வாடும் அனைவரும் விரைவில் மீண்டு வர பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.