தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

வெப்சீரிஸ் / விமர்சனம்

சோஃபியா (பாடினி குமார்), இளம் வயதிலேயே அறிவியல் கண்டுபிடிப்புகளில் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார். காதலின் உண்மைத்தன்மையை அறிவியல் ரீதியாக அளவிடும் ஒரு கருவியை கண்டுபிடிக்கிறார். தனது 24 வயதில், சித்து (குரு லஷ்மன்) என்ற காமிக் ரைட்டரை சந்திக்கிறார். சோஃபியாவின் கண்டுபிடிப்பு முற்றிலும் தவறு என்று சொல்லும் அவர், அறிவியல் இதயங்களை புரிந்துகொள்ளுமா? காதலின் மொழியை அதனால் மொழிபெயர்க்க முடியுமா என்று சவால் விடுகிறார். பிறகு என்ன நடக்கிறது? குரு லஷ்மனும், பாடினி குமாரும் காதலித்தார்களா என்பது மீதி கதை.

லவ் மீட்டர் என்பது அதீத கற்பனை என்றாலும், அது கண்டுபிடிக்கும் விஷயங்கள் இனிமையாக, சுவாரஸ்யமாக இருக்கிறது. ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தையும், அறிவியல் மீது ஈர்ப்பையும் கொண்டு வருகிறது. எழுத்தாளரும், இயக்குனருமான சதாசிவம் செந்தில்ராஜன், தனது முதல் வெப்சீரிஸிலேயே கவனத்தை ஈர்க்கிறார். குரு லக்ஷ்மன், பாடினி குமார் இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். குறிப்பாக, பாடினி குமாரின் மேக்கப் இல்லாத முகமும், அடர்ந்த சுருள் முடியும், ஆழமான கண்களும் இதயத்தை ஊடுருவுகிறது. மற்றும் ஜீவா ரவி, சுமித்ரா தேவி, அனித் யாஷ்பால், யோகலட்சுமி, இனியாள், சர்மிளா, பிரவீணா பிரின்சி, கலை, அஜித், பவித்ரா, சீனு ஆகியோரும் இயல்பாக நடித்துள்ளனர். 6 எபிசோடுகள் கொண்ட இத்தொடருக்கு ஒளிப்பதிவும், இசையும் கூடுதல் பலத்தை அளித்துள்ளது. வரும் 16ம் தேதி முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிறது.