தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

வெல்டிங் தொழிலாளி இயக்கிய படம் ராம் அப்துல்லா ஆண்டனி

சென்னை: அன்னை வேளாங்கண்ணி ஸ்டுடியோஸ் சார்பில் டி.எஸ்.கிளமெண்ட் சுரேஷ் தயாரிக்க, த.ஜெயவேல் எழுதி இயக்கியுள்ள படம், ‘ராம் அப்துல்லா ஆண்டனி’. இதில் ஆண்டனியாக பூவையார், அப்துல்லாவாக அர்ஜூன், ராம் ஆக அஜய் அர்னால்ட் நடித்துள்ளனர். மற்றும் வேல.ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சாய் தீனா, சவுந்தரராஜா, கிச்சா ரவி, ஜாவா சுந்தரரேசன், வினோதினி வைத்தியநாதன், அர்னவ், ராஜ் மோகன், வனிதா விஜயகுமார் நடித்துள்ளனர். டி.ஆர்.கிருஷ்ண சேட்டன் இசை அமைக்க, எல்.கே.விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் 31ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் த.ஜெயவேல் பேசும்போது, ‘இந்த படத்தை எடுத்த

வரைக்கும் பார்த்துவிட்டு, ‘இது குப்பை. இனிமேல் பணத்தை செலவிடுவது வேஸ்ட்’ என்று பலபேர் சொன்ன நிலையில், அதை எல்லாம் ஒதுக்கிவிட்டு, ‘இந்த குப்பையை கோபுரமாக்கி காட்டு’ என்று என்னை நம்பி மீண்டும் படப்

பிடிப்பை நடத்த தூண்டிய கிளமெண்ட் சுரேஷ் எனக்கு ஒரு கடவுள் மாதிரி. நான் ஒரு வெல்டராக இருந்துவிட்டு படத்தை இயக்கியுள்ளேன். என்் படம் பேசும்’ என்றார்.