அம்மாவாக நடித்தால் என்ன தப்பு...? கேட்கிறார் ஸ்ரேயா
ஐதராபாத்: பல்வேறு மொழிகளில் நடித்து வரும் ஸ்ரேயா, சூர்யாவுடன் ‘ரெட்ரோ’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். தற்போது ‘மிராய்’ என்ற படத்தில் ஹீரோவுக்கு அம்மாவாக நடித்துள்ளார். வரும் 12ம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், அம்மா வேடத்தில் ஸ்ரேயா நடித்திருப்பது குறித்து சோஷியல் மீடியாவில் கடுமையாக கிண்டல் செய்யப்படுகிறார். இதுகுறித்து ஸ்ரேயா கூறுகையில்,...
ஐதராபாத்: பல்வேறு மொழிகளில் நடித்து வரும் ஸ்ரேயா, சூர்யாவுடன் ‘ரெட்ரோ’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். தற்போது ‘மிராய்’ என்ற படத்தில் ஹீரோவுக்கு அம்மாவாக நடித்துள்ளார். வரும் 12ம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், அம்மா வேடத்தில் ஸ்ரேயா நடித்திருப்பது குறித்து சோஷியல் மீடியாவில்
கடுமையாக கிண்டல் செய்யப்படுகிறார்.
இதுகுறித்து ஸ்ரேயா கூறுகையில், ‘ஒரு படத்தில் நாம் ஏற்று நடிக்கும் ரோல் சிறப்பானதாகவும், அழுத்தமானதாகவும் இருந்தால், இளம் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிப்பதில் எனக்கு எந்தவிதமான தயக்கமும் கிடையாது. ‘மிராய்’ படத்தில் ஹீரோ தேஜா சஜ்ஜாவின் அம்மாவாக நடித்தேன். அம்மாவாக நடித்தால் என்ன தப்பு?’ என்றார்.