தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

தொடர்ந்து வில்லனாக நடிப்பது ஏன்?

சிவகார்த்திகேயன் நடித்த ‘மான் கராத்தே’ என்ற படத்தை தொடர்ந்து கிரிஷ் திருக்குமரன் எழுதி இயக்கியுள்ள ‘ரெட்ட தல’ என்ற படத்தில், மாறுபட்ட இரட்டை வேடத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். ஒரு அருண் விஜய் ஜோடியாக ‘வெந்து தணிந்தது காடு’ சித்தி இத்னானி நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். இப்படத்துக்காக சாம் சி.எஸ்...

சிவகார்த்திகேயன் நடித்த ‘மான் கராத்தே’ என்ற படத்தை தொடர்ந்து கிரிஷ் திருக்குமரன் எழுதி இயக்கியுள்ள ‘ரெட்ட தல’ என்ற படத்தில், மாறுபட்ட இரட்டை வேடத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். ஒரு அருண் விஜய் ஜோடியாக ‘வெந்து தணிந்தது காடு’ சித்தி இத்னானி நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். இப்படத்துக்காக சாம் சி.எஸ் எழுதி இசை அமைத்த ஒரு மெலடி பாடலை தனுஷ் பாடியுள்ளார். படம் குறித்து அருண் விஜய் கூறுகையில், ‘எப்போதுமே நான் கேரக்டரை பற்றி மட்டுமே பார்ப்பேன். என்னால் அதில் என்னென்ன வித்தியாசத்தை காட்டி நடிக்க முடியும் என்று யோசிப்பேன். அது ஹீரோவா, வில்லனா என்று பார்க்க மாட்டேன்.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘என்னை அறிந்தால்’ படத்தில், அஜித் குமாருடன் சேர்ந்து நடித்தேன். அந்த வில்லன் கேரக்டர் எனக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பையும், புகழையும் கொடுத்தது. இப்போது கூட அஜித் குமாரின் ரசிகர்கள் எனது படங்களுக்கு பேராதரவு கொடுத்து வருகின்றனர். தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ என்ற படத்தில் நான் வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறேனா என்பது, படம் திரைக்கு வந்த பிறகு தெரியும். தனுஷ் எனது கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால், அது என்ன வேடம் என்பது பற்றி யோசிக்காமல் ஒப்புக்கொண்டு நடித்தேன். ‘ரெட்ட தல’ படத்தில் எனக்கு நான்தான் வில்லன்’ என்றார்.