பெண்ணின் போராட்டத்தை சொல்லும் கதை
உத்ரா புரொடக்ஷன்ஸ் எஸ்.ஹரி வழங்க, டார்க் ஆர்ட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஹரி கே.சுதன் எழுதி இயக்கி தயாரித்துள்ள படம், ‘ ’. இதில் ‘ரங்கோலி’ சாய்ஸ்ரீ பிரபாகரன், பாவெல் நவகீதன், சித்து குமரேசன், விக்னேஷ் ரவி நடித்துள்ளனர். கே.காமேஷ், ஏ.நிஷார் ஷெரீப் இணைந்து எடிட்டிங் செய்துள்ளனர். அரவிந்த் கோபாலகிருஷ்ணன், பரத் சுதர்சன் இணைந்து இசை அமைத்துள்ளனர். ஜி.மணிசங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோமதி காசிநாதன், பிரியதர்ஷினி, பிரத்யுமன் இணை தயாரிப்பு செய்துள்ளனர். படம் குறித்து ஹரி கே.சுதன் கூறுகையில், ‘படத்தின் கதைப்படி ஒரு பெண்ணுக்கு திடீரென்று வேறொரு விஷயத்தில் அதிக ஆர்வம் ஏற்படுகிறது.
பணியின் காரணமாக கட்டுப்பாட்டில் வைத்திருந்த உணர்வுகள் மனதை சிதைக்கிறது. இதையடுத்து அப்பெண்ணை சமூகம் தூற்றுகிறது. அவரது எண்ணத்தை புரிந்துகொள்ள மறுக்கிறது. அப்பெண்ணுக்கான தனிப்பட்ட உணர்வுகளை உறவினர்கள் மட்டுமின்றி, பெற்ற தாயும் ஏற்க மறுக்கிறார். சமூகத்தைவிட்டே அப்பெண் ஒதுக்கப்படும் நிலையில், அவர் என்ன முடிவு செய்தார் என்பது திரைக்கதை. நாட்டில் நடக்கும் உண்மைகளை படத்தில் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதி இயக்கி தயாரித்துள்ளேன். வரும் ஆகஸ்ட்டில் படம் திரைக்கு வருகிறது’ என்றார்.