பெண்களின் பாதுகாப்புக்கு சுவாசிகா ஐடியா
தமிழில் பல படங்களில் நடித்தும் எடுபடாமல், மீண்டும் மலையாளத்துக்கு சென்று நடித்து வந்த சுவாசிகா, மீண்டும் தமிழுக்கு வந்து ‘லப்பர் பந்து’ என்ற படத்தில் நடித்தார். பிறகு ‘ரெட்ரோ’, ‘மாமன்’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது சூர்யாவின் ‘கருப்பு’ என்ற படத்தில் நடித்துள்ளார். வெப்சீரிஸ், சினிமா, டி.வி., விளம்பரங்கள் என்று பிசியாக இருக்கும் சுவாசிகாவிடம், ‘திரையுலகில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு இருப்பதாக கூறப்படுகிறதே?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சுவாசிகா, ‘கடந்த 15 வருடங்களாக திரைத்துறையில் நீடித்து வருகிறேன்.
இதுவரை அதுபோன்ற பிரச்னையை நான் சந்தித்தது இல்லை. திரையுலகில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இந்த பிரச்னை இருக்கிறது. வேலைக்கு செல்லாத பெண்களுக்கு, ஏன் சிறுமிகளுக்கு கூட இங்கே ஒரு பாதுகாப்பு இல்லை. பெண்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால், அவர்கள் தைரியமாக இருக்க வேண்டும். எந்த இடத்திலும் வளைந்து கொடுக்கக்கூடாது. ஒருவர் நம்மிடம் தவறாக நடக்க முயற்சித்தால், உடனடியாக அதை எதிர்கொள்ளவும், அவர்களை சமூகத்தின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தவும் தயங்கக்கூடாது. இதையெல்லாம் தடுக்க சட்டத்தை கடுமையாக்க வேண்டும். அதுவரை பெண்களே தங்களை முழுமையாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும்’ என்றார்.