உலக சாதனை படைத்த ஆண் பாவம் பொல்லாதது
சென்னை: டிரம்ஸ்டிக்ஸ் புரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில் பிளாக்ஷிப் இயக்குனர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ்- மாளவிகாவின் கூட்டணியில் உருவாகியுள்ள படம் “ஆண் பாவம் பொல்லாதது”. இந்த படத்தினுடைய டிரெய்லர் வெளியிடும் நிகழ்வு, உலக சாதனையை புரிந்துள்ளது. இதன் மூலம், உலகிலேயே அதிகபட்ச நபர்களால் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட திரைப்பட டிரெய்லர் எனும் பெருமையைப் பெற்றிருக்கிறது ஆண் பாவம் பொல்லாதது திரைப்படம்.
இந்த நிகழ்வில் 8000 மாணவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கெடுத்து சரியாக காலை 11.30 மணிக்கு அனைவரும் ஒன்று சேர்ந்து, தங்கள் சமூக ஊடக கணக்குகளிலிருந்து ஆண் பாவம் பொல்லாதது திரைப்படத்தின் டிரெய்லரை பதிவேற்றம் செய்தனர். இந்நிகழ்வு ஈரோடு எக்ஸெல் கல்லூரியில் நடைப்பெற்றது.
உலக சாதனை இயக்ககத்தின் அதிகாரி அலைஸ் ரெனாட் இந்த சாதனையை அங்கீகரித்து பாராட்டினார். “படம் பெரும்பாலும் மக்களோடு ஒன்றிப்போகும் என்பதாலேயே, இதை மக்களை வைத்தே ரிலீஸ் செய்ய முடிவெடுத்தோம்’’ என்றார் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி சக்திவேல்.