தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

யஷ் அம்மாவுக்கு பதிலடி கொடுத்த நடிகை

பான் இந்தியா நடிகர் யஷ்சின் அம்மா புஷ்பா, சமீபத்தில் தயாரிப்பாளராக மாறி, ‘கொத்தலவாடி’ என்ற கன்னட படத்தை தயாரித்தார். ஜி.ராஜூ இயக்கிய இதில் பிருத்வி அம்பார், காவ்யா ஷைவா நடித்திருந்தனர். கடந்த 1ம் தேதி வெளியான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ஏமாற்றத்தை கொடுத்தது. முன்னதாக இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய புஷ்பா, கன்னட நடிகை தீபிகா...

பான் இந்தியா நடிகர் யஷ்சின் அம்மா புஷ்பா, சமீபத்தில் தயாரிப்பாளராக மாறி, ‘கொத்தலவாடி’ என்ற கன்னட படத்தை தயாரித்தார். ஜி.ராஜூ இயக்கிய இதில் பிருத்வி அம்பார், காவ்யா ஷைவா நடித்திருந்தனர். கடந்த 1ம் தேதி வெளியான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ஏமாற்றத்தை கொடுத்தது.

முன்னதாக இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய புஷ்பா, கன்னட நடிகை தீபிகா தாஸ் குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துகளை தெரிவித்தார். அப்போது, ‘அடுத்த படத்தில் தீபிகா தாஸை நடிக்க வைக்கும் எண்ணம் இருக்கிறதா?’ என்று புஷ்பாவிடம் நிகழ்ச்சி தொகுப்பாளினி கேட்டார். அதற்கு புஷ்பா, ‘தீபிகா தாஸ் எல்லாம் முன்னணி ஹீரோயினா? அப்படி என்ன அவர் சாதித்துவிட்டார் என்று, அவரது பெயரை குறிப்பிட்டு கேள்வி கேட்கிறீர்கள்?’ என்று கிண்டலாக பதிலளித்தார்.

அவரது கருத்து வைரலான நிலையில், புஷ்பாவின் சர்ச்சை பேச்சுக்கு பதிலளித்த தீபிகா தாஸ், ‘புதிய கலைஞர்களை அறிமுகப்படுத்த விரும்பும் நபர்கள், முதலில் அந்த கலைஞர்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். சினிமாவில் முன்னேற இதுவரை யாருடைய பெயரையும் நான் பயன்படுத்தியது இல்லை.

நான் ஒரு முன்னணி நடிகையாக இல்லாமல் இருக்கலாம், எதையும் சாதிக்காமல் இருக்கலாம். ஆனால், என்னைப் பற்றி மோசமாக பேச அம்மாவாக இருந்தாலும் சரி, புஷ்பாம்மாவாக இருந்தாலும் சரி, யாருக்கும் உரிமை இல்லை. இதுவரை அமைதியாக இருந்ததற்கு காரணம், அவர் மீது நான் கொண்ட மரியாதைதானே தவிர, பயத்தினால் அல்ல’ என்று ஆவேசப்பட்டார்.