தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

யூடியூபில் திருக்குறள் திரைப்படம்

சென்னை: பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ‘Welcome Back Gandhi’ என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் ஏ.ஜே.பாலகிருஷ்ணன் இயக்கத்தில், திருக்குறளை மையமாக வைத்து உருவான ‘திருக்குறள்’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

உலகப் பொதுமறையான திருக்குறளை உலகம் முழுக்க உள்ள மக்களுக்குக் கொண்டு செல்லும் வகையில், இப்படம் யூடியூப் தளத்தில் வெளியிடும் விழா சென்னையில் நடைபெற்றது. ஏ.ஜே.பாலகிருஷ்ணன் பேசும்போது, ‘‘மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று, யூடுயூப்பில் இலவசமாக வெளியிடலாம் என முடிவு செய்தோம். ராம்ராஜ் குழும தலைவர் நாகராஜ் விளம்பரம் தந்து வெறும் கார்ட் மட்டும் போடுங்கள், என்று பெருந்தன்மையோடு சொன்னார். அவருக்கு நன்றி’’ என்றார்.