சிவகார்த்திகேயனின் மாஸ் லைன் அப்
‘அமரன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகியுள்ள படம் ‘மதராஸி’. கடந்த 5ம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ‘சிக்கந்தர்’ படத்தின் படு தோல்விக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸுக்கு இப்படம் பெரியளவில் கை கொடுத்துள்ளது. அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இது சிவகார்த்திகேயனின்...
‘கல்கி’ 2ம் பாகத்தில் கல்யாணி
சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ என்ற சூப்பர் உமன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மிகவும் குறைந்த செலவில் எடுக்கப்பட்டு தென்னிந்திய சினிமாவில் உருவான முதல் சூப்பர் உமன் கதையம்சத்துடன் கூடிய படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக...
மாளவிகா மோகனனை ஆடிஷன் செய்த மம்மூட்டி
தமிழில் ‘பேட்ட’, ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் நடித்தவர் மாளவிகா மோகனன். தொடர்ந்து தனுஷுடன் ‘மாறன்’ விக்ரமுடன் சேர்ந்து நடித்த ‘தங்கலான்’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு அவருக்கு வெற்றியைத் தரவில்லை. தற்போது பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’ என்ற பான் இந்தியா படத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘சர்தார் 2’ ஆகிய...
8 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு வரும் நடிகை
வட இந்தியாவில் பிறந்தாலும் தென்னிந்திய சினிமாவில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருபவர் லாவண்யா திரிபாதி. ‘அந்தாள ராட்சசி’ என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். சசிகுமார் ஜோடியாக ‘பிரம்மன்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ‘மாயவன்’ படத்தில் நடித்தார். அதன்பிறகு தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வந்த லாவாண்யா, நடிகர் வருண்...
நடிகைக்கு புரபோஸ் செய்த 17 வயது சிறுவன்
திரைப் பிரபலங்களை பார்த்தால் அவர்களுடன் செல்ஃபி எடுக்கவேண்டும் என ரசிகர்கள் நினைப்பார்கள். அதில் சிலர் போட்டோ எடுப்பதோடு நிறுத்தாமல் தங்கள் மனதில் இருக்கும் எண்ணத்தை தெரிவிப்பார்கள். இன்னும் சிலர் நடிகைகளின் சமூக வலைத்தளத்தில் மெசேஜ் அனுப்புவார்கள். அந்தவகையில் மலையாள நடிகை ஒருவரிடம் 17 வயது சிறுவன் தனது காதலை வெளிப்படுத்தி இருக்கிறான். சமீபத்தில் மலையாள நடிகை...
‘லோகா’ யூனிவர்ஸில் இணையும் மம்மூட்டி
நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லின் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்றுள்ள படம் ‘லோகா சாப்டர் 1: சந்திரா’. சூப்பர்வுமன் சப்ஜெக்ட்டில் உருவான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. முன்னதாக இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய...
வெளியில் தலைகாட்ட தயங்கும் ஸ்ரீகாந்த்
சமீபத்தில் ஸ்ரீகாந்த் நடித்த ‘சத்தமின்றி முத்தம் தா’, ‘மாய புத்தகம்’, ‘தினசரி’, ‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்’ உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு தரவில்லை. தற்போது மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், தேஜு அஷ்வினி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிளாக்மெயில்’ படத்தில் முக்கிய வேடத்தில் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். அவர் ஜோடியாக...
நெருக்கமான காட்சிகளுக்கு ஓகே சொல்லும் ஸ்ரத்தா
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘காற்று வெளியிடை’ படத்தில் கேமியோ ரோல் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரத்தா நாத். தொடர்ந்து ‘இவன் தந்திரன்’, ‘விக்ரம் வேதா’, ‘மாறா’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘இருகப்பற்று’ போன்ற படங்களில் நடித்து கவனம் பெற்றார். தற்போது விஷ்ணு விஷால் நடிக்கும் ‘ஆர்யன்’ என்ற படத்திலும், நடிகர் ரவி மோகன் தயாரித்து, நடிக்கும்...
அடுத்தடுத்த சம்பவம் பயந்துபோன நடிகை
நடிகர் ‘சிக்கல்’ ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இரவின் விழிகள்’ படத்தை மகேந்திரா பிலிம் பேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரித்து ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நீமா ரே நடித்துள்ளார். இவர் கடந்த 2020ம் ஆண்டு வெளியாகி சிறந்த துளு படத்திற்கான தேசிய விருதை வென்ற ‘பிங்காரா’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர். தற்போது...