100 சினிமா பிரபலங்கள் வெளியிட்ட பாடல்

சென்னை: கே.சி.பி.மிதுன் சக்கரவர்த்தி மற்றும் ஜீவிதா நடிப்பில் உருவான ‘அடியே வெள்ளழகி’ பாடலின் முதல் பார்வையை 100க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் வெளியிட்டார்கள். கட்டெறும்பு யூடியூப் சேனலில் இந்தப்பாடல் வெளிவந்துள்ளது .இந்த ஆல்பம் பாடலைக் கட்டெறும்பு ஸ்டாலின் தயாரித்துள்ளார் . அனைத்து தரப்பினரும் கண்டு மகிழும்படி உருவாக்கப்பட்டுள்ளது.இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் காதல் என்கிற மெல்லுணர்வை...

தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கதை திரள்

சென்னை: எஸ்.எம். தமிழினி புரொடக்சன்ஸ் கே.சசிகுமார், சி.பி. பிலிம்ஸ் ஆர்.சின்னசாமி இணைந்து தயாரிக்கும் ‘திரள்’ படத்தை மனோஜ் கார்த்தி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு அபி ஆத்விக், இசை ஏ.இ.பிரஷாந்த், எடிட்டிங் மனோஜ் கார்த்தி. ரவி பிரகாஷ், நடிகர் மயில்சாமி மகன் யுவன் மயில்சாமி, கிரி மூவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். அல்பியா மீராராஜ் இருவரும் கதாநாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன்...

7 ஆண்டுக்கு பிறகு நடிக்க வரும் ஹீரோ

சென்னை: டார்லிங் - 2 (2016) ஹாரர் காமெடி படத்தையும் விதிமதி உல்டா (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து அறிமுகமானவர் ரமீஸ் ராஜா. இப்போது 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளராகவும, கதாநாயகனாகவும் திரும்புகிறார். ‘‘இன்றைய சூழ்நிலையில் மக்களிடையே ஹாரர், திரில்லர் படங்களுக்குதான் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனால்தான் அடுத்த படத்தையும்...

விமர்சனம் பாம்

காளகம்மாய்பட்டி என்ற கிராமம் குலதெய்வம் மற்றும் சாதி பிரச்னை காரணமாக காளபட்டி, கம்மாய்பட்டி என்று இரண்டாக பிரிகிறது. பிரிந்த மக்களை ஒன்றிணைக்க அர்ஜூன் தாஸ், காளி வெங்கட் போராடுகின்றனர். அப்போது காளி வெங்கட் மரணம் அடைகிறார். அர்ஜூன் தாஸ் செய்வதறியாமல் தவிக்கிறார். காளி வெங்கட் உடலில் சாமி இறங்கியிருப்பதாக ஊர் பூசாரி சொல்ல, யாரும் எதிர்பார்க்காத...

சகோதரர் மனைவிக்கு வரதட்சணை கொடுமை: கைதாவாரா ஹன்சிகா..?

சென்னை: தமிழில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இன்று பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். நடிகை ஹன்சிகா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சொஹைல் கத்துரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். பாலிவுட் வட்டாரத்தில்...

காந்தி கண்ணாடி வெற்றி கொண்டாட்டம்

சென்னை: பாலா ஹீரோவாக நடித்துள்ள ‘காந்தி கண்ணாடி’ படம் கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஷெரிஃப் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தை ஜெய் கிரண் என்பவர் தயாரித்துள்ளார். இப்படத்தில் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நமிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருக்க விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர். இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வரவேற்பை கொண்டாடும்...

‘காந்தாரா: சாப்டர் 1’: படத்துக்கு திடீர் சிக்கல்

கேரளாவில் ‘காந்தாரா: சாப்டர் 1’ என்ற படத்தின் வெளியீட்டில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு திட்டமிட்டபடி படம் திரைக்கு வராது என்று சொல்லப்படுகிறது. ‘காந்தாரா’ என்ற படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள படம், ‘காந்தாரா: சாப்டர் 1’. இப்படத்துக்கு அனைத்து மொழி ரசிகர்களிடமும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே,...

நடிப்புக்காக வேலையை இழந்த திரிப்தி

விஜய் ஆண்டனி நடித்துள்ள 25வது படம், ‘சக்தித் திருமகன்’. இதை ‘அருவி’, ‘வாழ்’ ஆகிய படங்களின் இயக்குனர் அருண் பிரபு எழுதி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி தயாரித்து இசை அமைத்துள்ளார். ஷெல்லி ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் 19ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து அருண் பிரபு கூறுகையில், ‘இது மக்கள் சார்ந்த அரசியல் படம்....

இருமொழிகளில் வெளியாகும் ‘பெண்கோட்’

ஆணும், பெண்ணும் ஒன்றல்ல. இருவரும் வெவ்வேறானவர்கள்; தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்று, தத்துவமேதை ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்லியிருக்கிறார். பெண்களுக்கு இருக்கும் சில பிரத்தியேக எண்ணங்களை, அவர்களுடைய உலகத்துக்கு சென்று பார்த்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்ற கருத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ள கிரைம் திரில்லர் படம், ‘பெண்கோட்’. தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படம், ஜேஎன்கேஎல் கிரியேஷன்ஸ் சார்பில் தமிழகம்...

ஹீரோவுக்கு முத்தம் கொடுக்க மறுத்த ஸ்ரீலீலா

கடந்த 2019ல் கன்னடத்தில் ஹிட்டான ‘கிஸ்’ என்ற படம், தமிழில் ‘கிஸ் மீ இடியட்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலீலா, வீராட், ரோபோ சங்கர், நாஞ்சில் விஜயன், அஸ்வதி நடித்துள்ளனர். ஜெய்சங்கர் ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்ய, பிரகாஷ் நிக்கி இசையில் மணிமாறன் பாடல்கள் எழுதியுள்ளார். கன்னடத்தில் இயக்கிய ஏ.பி.அர்ஜூன் தமிழிலும் இயக்கியுள்ளார். வரும் 26ம்...