ரஜினி கேங் விமர்சனம்...
காதலர்கள் ரஜினி கிஷன், த்விகா இருவரும் ஊரை விட்டு ஓடி திருமணம் செய்துகொள்ள முயற்சிக்கின்றனர். அப்போது அவர்கள் முனீஷ்காந்தின் காரில் லிப்ட் கேட்கின்றனர். அதே காரில் திருடன் கல்கிக்கும் லிப்ட் கொடுக்கின்றனர். நால்வரும் காரில் பயணித்து ஏற்காடு மலைப்பகுதிக்கு செல்கின்றனர். கனகா என்ற ராசியான அந்த காரை பறிகொடுத்த அமைச்சர் மனோகர், உடனே அதை கண்டுபிடிக்க...
வெள்ளகுதிர விமர்சனம்...
நகரத்தின் நரக வாழ்க்கையை துறந்து, போலீஸ் துரத்தலுக்கு பயந்து, சூழ்நிலை கைதியாய் மலையிலுள்ள தனது பூர்வகுடிக்கு மனைவி அபிராமி போஸ் மற்றும் மகனுடன் வருகிறார், ஹரிஷ் ஓரி. அங்கு கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்துகிறார். மலைக்கிராம முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உதிரி விஜயகுமார், அந்த மக்களின் அறியாமையை பயன்படுத்தி, நிலங்களை ஏமாற்றி எழுதி வாங்குகிறார்....
பிபி 180 விமர்சனம்
சென்னையின் முக்கிய பிரமுகர் கே.பாக்யராஜின் மகள் சாலை விபத்தில் அகால மரணம் அடைகிறார். தனது மகளின் சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்யாமல், அப்படியே கேட்கிறார் பாக்யராஜ். சட்டப்படி அது தவறு என்று சொல்லி மறுக்கும் டாக்டர் தான்யா ரவிச்சந்திரனுக்கு அரசியல்வாதிகளும், ரவுடிகளும், காவல்துறையும் கடும் நெருக்கடி கொடுக்கிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தான்யா ரவிச்சந்திரன் என்ன...
விமர்சனம்: ஃப்ரைடே
ரவுடியான அனிஷ் மாசிலாமணி, தனது தம்பி தன்னைப்போல் ரவுடியாகிவிட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். இந்நிலையில் கேபிஒய் தீனா, தனது தாயின் கொடூரமான மரணத்துக்கு காரணமானவர்களை போட்டுத்தள்ள காத்திருக்கிறார். தனது அண்ணனுக்கு தெரியாமல், ராம்ஸ் கோஷ்டியுடன் மைம் கோபியின் எதிராளியை போட்டுத்தள்ள சென்ற அனிஷ் மாசிலாமணியின் தம்பி, கேபிஒய் தீனாவால் சுட்டு கொல்லப்படுகிறார். இதையறிந்த அனிஷ்...
விமர்சனம்: ஒண்டிமுனியும் நல்லபாடனும்
நிலத்தில் கடினமாக உழைக்கும் பாட்டாளியை, ‘நல்லபாடன்’ என்று சொல்வது கொங்கு வட்டார வழக்கம். வான்மழையை நம்பி சிறுநிலத்தில் உழுது வாழ்க்கை நடத்தும் நல்லபாடன் பரோட்டோ முருகேசன், கிணற்றில் விழுந்த தனது மகன் விஜயனின் உயிரைக் காப்பாற்ற வேண்டி, ஒண்டிமுனிக்கு ஒரு கிடாயை நேர்ந்து விடுகிறார். ஊரிலுள்ள 2 பண்ணையார்களின் ஈகோவால், பல வருடங்களாக ஒண்டிமுனிக்கு திருவிழா...
மிடில் கிளாஸ் விமர்சனம்...
நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த முனீஷ்காந்த், விஜயலட்சுமி தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள். கிராமத்தில் நிலம் வாங்கி வீடு கட்டி சந்தோஷமாக வாழ வேண்டும் என்பது முனீஷ்காந்தின் கனவு. நகரிலேயே சொகுசாக வாழ வேண்டும் என்பது விஜயலட்சுமியின் எண்ணம். வசதியில்லாத அவர்கள் அடிக்கடி மோதுகிறார்கள். இந்நிலையில், முனீஷ்காந்தின் தந்தை வேல.ராமமூர்த்தி எப்போதோ இலவசமாக கொடுத்த கடையின்...
இரவின் விழிகள் விமர்சனம்...
ஏற்காடு பதியிலுள்ள அடர்ந்த காட்டில், திடீர் திடீரென்று கொலைகள் நடக்கிறது. அவர்களை கொன்ற சைக்கோ ஆசாமி யார் என்று போலீசார் வலைவீசி தேடுகின்றனர். அப்போது சைக்கோவிடம் ஹீரோ மகேந்திரா, ஹீரோயின் நீமா ரே சிக்கி உயிருக்கு போராடுகின்றனர். அவர்களை காப்பாற்ற போலீஸ் அதிகாரி சேரன் ராஜ், கான்ஸ்டபிள் சிசர் மனோகர் முற்படும்போது, சைக்கோ ஆசாமி தன்னை...
பாய் விமர்சனம்...
தமிழகத்தில் பயங்கரவாத சம்பவத்தை அரங்கேற்ற ஒரு குழுவின் மூளையாக செயல்படுகிறார் ஹீரோ ஆதவா ஈஸ்வரா. அவரது மனைவி ஊரில் இருந்து வீட்டுக்கு வருவதாக போன் செய்கிறார். தனது ரகசியங்கள் மனைவிக்கு தெரிய கூடாது, என்பதால் அவருக்கு முன்னதாக வீட்டுக்கு செல்கிறார். அங்கு, ஒரு ஆணும், பெண்னும் உல்லாசமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். பிறகு என்ன நடந்தது...
கும்கி 2 விமர்சனம்...
மலை கிராமத்தில் சாராயம் காய்ச்சுபவர், சூசன் ஜார்ஜ். அவரது மகன் மதி, தனது சிறுவயதில், குழிக்குள் விழுந்த ஒரு யானை குட்டியை காப்பாற்றுகிறார். இதனால் அந்த யானை அவரை நம்பி, அவரது வாழ்க்கையில் அன்பையும், ஆறுதலையும் தருகிறது. யானை வளர்ந்த பின்பு, அதற்கு பல லட்சங்களில் விலை பேசப்படுவதை அறிந்த சூசன் ஜார்ஜ், அதை மதிக்கு...
