Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தமிழ்ப் படத்தில் டைனோசர்

சென்னை: மறைந்த நடிகை தேவியின் தங்கையும், ‘கருத்தம்மா’ ஹீரோயின் மகேஸ்வரியின் தம்பியுமான உதய் கார்த்திக், சாய் பிரியா தேவா நடித்துள்ள படம், ‘டைனோசர்ஸ்’. ஜோன்ஸ் வி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய, போபோ சசி இசை அமைத்துள்ளார். கேலக்ஸி பிக்சர்சுக்காக னிவாஸ் சம்பந்தம் தயாரித்துள்ளார். வரும் 28ம் தேதி ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடுகிறது. எழுதி இயக்கியுள்ள எம்.ஆர்.மாதவன் கூறும்போது, ‘டைனோசர்ஸ்’ என்பதற்கு, ‘சாக வேண்டாம் சார்’ என்ற அர்த்தமும் இருக்கிறது. வடசென்னை பகுதியில் நடக்கும் கேங்ஸ்டர் கதை என்றாலும், வழக்கமான பழிவாங்கும் படலமாக இருக்காது. வன்முறை வேண்டாம் என்பதை வலியுறுத்தும் இப்படத்துக்கு சென்சாரில் சில வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு யு/ஏ சான்றிதழ் கொடுத்தனர். தன்னை எதிர்த்தவனை எதிர்க்காமல், ஹீரோ என்ன முடிவு எடுக்கிறார் என்பதை மிகவும் வித்தியாசமான கோணத்தில் சொல்லியிருக்கிறோம். காட்சிப்படி ஒரு டைனோசர் இடம்பெறுகிறது’ என்றார்.