சென்னை: ஒரு சட்ட கல்லூரி மாணவியின் சமூகதீர்க்கான போராட்டம் தான் ‘ஈகை’ என்கிறார் இப்படத்தின் இயக்குனர் அசோக் வேலாயுதம். அவர் மேலும் கூறும்போது, ‘‘இப்படத்தில் மார்க் எனும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் ரோஷன் கனகராஜ் என்பவரை அறிமுகம் செய்கிறேன். இவரும் புஷ்பா பட வில்லன் சுனிலும் முக்கிய கதாபாத்திரங்களாக இருக்கும். இத்துடன் சேர்ந்து அருவி பாலா, ரூபினி மற்றும் 25 புதிய முகங்களை ஒரு முக்கிய கதாபத்திரத்தில் அறிமுகம் படுத்துகிறேன்’’ என்றார். கதை நாயகியாக அஞ்சலியுடன் சந்தோஷ் பிரதாப், அர்ஜய், பொன்வண்ணன் உள்பட பட பலர் நடிக்கிறார்கள். தயாரிப்பு கிருஷ்ணமச்சாரிய ராமபத்திரன், பிருந்தா கிருஷ்ணா க்ரியேஷன்ஸ். ஒளிப்பதிவு - ஸ்ரீதர். எடிட்டிங் - என்.பி.ஸ்ரீகாந்த். வசனம் - பரதன். இசை - தரன்குமார்.
+