Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

விமானம் தாமதம் மாளவிகா மோகனன் கடும் கோபம்

சென்னை: விமான நிறுவனம் இண்டிகோவின் சேவையை விமர்சித்துள்ள மாளவிகா மோகனன், தனது எக்ஸ் தள பக்கத்தில், விமான தாமதம் குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். அதில், “ஏன் இண்டிகோவின் பத்து விமானங்களில் ஒன்பது எப்போதுமே தாமதமாகவே புறப்படும்? பயணிகளை விமானத்தில் உட்கார வைக்கின்ற பெயரில், ஒரு மணி நேரத்துக்கும் மேல் இப்படி தாமதப்படுத்துவது என்ன விதமான நடைமுறை? உங்களுக்கு தாமதம் பற்றிய அறிவிப்பு வந்தபின், பயணிகளை உட்கார வைக்கும் பணியையும் சிறிது நேரம் தாமதமாகச் செய்யலாமே?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மாளவிகாவின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, அவரது கருத்துக்கு ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.