சென்னை: சமந்தா, இயக்குனர் ராஜ் நிடிமொரு திருமணம் கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் நேற்று நடந்தது. ‘தி ஃபேமிலி மேன்’ என்ற இந்தி வெப்தொடரின் 2வது சீசனில் சமந்தா ஹீரோயினாக நடித்தார். இந்த படப்பிடிப்பில் பணியாற்றியபோது சமந்தாவுக்கும், தொடர் இயக்குனர் ராஜ் நிடிமோருவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. எனினும், தங்கள் காதலை இருவரும் வெளிப்படையாக அறிவிக்காமல் ரகசியமாக வைத்திருந்தனர். ராஜ் நிடிமோரு ஏற்கனவே திருமணமானவர். அவரது காதலை அறிந்த முதல் மனைவி ஷ்யாமலி டே சமீபத்தில் பிரச்னை செய்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
சமந்தாவின் முதல் திருமணம் கடந்த 2017ல் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் நடந்தது. அவர்கள் கடந்த 2021ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பிறகு நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா காதல் திருமணம் செய்தார். இது இருவருக்கும் 2வது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல், நேற்று கோவையில் ரகசிய காதல் திருமணம் செய்துள்ள சமந்தாவுக்கும், ராஜ் நிடிமோருவுக்கும் இது 2வது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ராஜ், டி.கே இயக்கும் புதிய இந்தி வெப்தொடரில் சமந்தா நடித்து வருகிறார். அதோடு, தெலுங்கில் தனது 2வது படத்தை தயாரித்து ஹீரோயினாக நடித்து வருகிறார். இயக்குனர் ராஜ் நிடிமோருவின் மாஜி மனைவி சியாமலி தே தனது சோசியல் மீடியாவில் ஒரு அதிர்ச்சியூட்டும் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘நம்பிக்கை இல்லாதவர்கள் நம்பிக்கையற்ற செயல்களை செய்கிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
