டி.வியில் இருந்து திரைத்துறைக்கு சென்று கலக்கி வருபவர்களில் ஒருவர், வாணி போஜன். கடந்த 2020ல் வெளியான ‘ஓ மை கடவுளே’ என்ற படத்தில் சிறப்பாக நடித்திருந்த அவர், பிறகு ‘லாக்கப்’, ‘மலேசியா டு அம்னீசியா’, ‘இராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’, ‘மகான்’, ‘மிரள்’, ‘பாயும் ஒளி நீ எனக்கு’, ‘லவ்’, ‘அஞ்சாமை’, ‘கேங்கர்ஸ்’ உள்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தார். தனது சிறப்பான நடிப்பு மற்றும் அழகின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க தீவிர முயற்சி செய்து வருகிறார்.
இந்நிலையில், வரும் 28ம் தேதி தனது 37வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். ஆனால், முன்னதாகவே தனது நெருங்கிய தோழிகள் சம்யுக்தா ஷான், பிரக்யா நாக்ரா, மீனாட்சி கோவிந்தராஜன், ஐஸ்வர்யா தத்தா, அதுல்யா ரவி ஆகியோருடன் இணைந்து தனது ப்ரீ-பர்த்டேவை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார். அப்போது எடுத்த போட்டோக்களை அந்தந்த நடிகை தனது சோஷியல் மீடியா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது.
