Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

முன்னாள் காதலர்கள் வனிதா, ராபர்ட் நடிக்கும் படம்

சென்னை: முன்னாள் காதலர்களான வனிதா விஜயகுமார், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் இணைந்து நடிக்கும் படத்துக்கான ஷூட்டிங் பாங்காங்கில் தொடங்கியது. அங்குள்ள மாரியம்மன் கோயிலில் பூஜை போடப்பட்டுள்ளது. படத்துக்கு ‘மிஸ்டர் அன்ட் மிஸஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. வனிதாவின் நண்பர் ஆஸ்திரேலியா ஜோஷ் படத்தை தயாரிக்கிறார். ஏற்கனவே வனிதாவும், ராபர்ட்டும் சில வருடங்கள் இணைந்து வாழ்ந்தது குறித்து வனிதா பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். ‘வனிதாவை நான் பிரிந்துவிட்டாலும், பல விஷயங்களில் அவர் எனக்கு அறிவுரை சொல்லி வருகிறார்’ என்று ராபர்ட் கூறியுள்ளார்.

‘மிஸ்டர் அன்ட் மிஸஸ்’ படத்தில் வனிதாவின் தந்தையாக ரவிகாந்த், தாயாக ஷகீலா நடித்து வருகி்ன்றனர். இவர்களுடன் பிரேம்ஜி, சுனில் நடிக்கின்றனர். பார்த்திபன் இயக்கிய ‘டீன்ஸ்’ படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய வனிதாவின் மகள் ஜோவிகா, ‘மிஸ்டர் அன்ட் மிஸஸ்’ படத்துக்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.