Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

EMI மாதத்தவணை படத்தில் இன்னுயிர் காப்போம் மெசேஜ்

சென்னை: சபரி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மல்லையன் தயாரித்துள்ள படம், ‘EMI மாதத்தவணை’. சதாசிவம் சின்னராஜ் எழுதி இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். மற்றும் சாய் தான்யா, பேரரசு, பிளாக் பாண்டி, ஆதவன், ஓ.ஏ.கே.சுந்தர், மனோகர், டி.கே.எஸ்., செந்தி குமாரி நடித்துள்ளனர். பிரான்சிஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பேரரசு, விவேக் பாடல்கள் எழுதியுள்ளனர். நாத் பிச்சை இசை அமைத்துள்ளார். இவர், சிம்பு பாடி ஹிட்டான ‘என் நண்பனே’ என்ற ஆல்பத்துக்கு இசை அமைத்தவர். படம் குறித்து சதாசிவம் சின்னராஜ் கூறுகையில், ‘இன்றைய சூழ்நிலையில் 90 சதவீதம் பேர், இஎம்ஐ மூலம் பொருட்கள் வாங்காமல் வாழ்க்கை நடத்த முடிவது இல்லை.

லோன் வாங்கிவிட்டு மாதத்தவணையை ஒழுங்காக கட்டவில்லை என்றால், அடுத்து என்னென்ன நடக்கும் என்றே சொல்ல முடியாது. இஎம்ஐ கட்ட முடியாமல் திண்டாடும் ஹீரோ மற்றும் அவருக்கு ஆதரவாக கையெழுத்திட்ட நண்பர்கள் சந்திக்கும் பிரச்னைகளை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. தமிழ்நாடு அரசின் ‘இன்னுயிர் காப்போம்’ என்ற திட்டம் குறித்து கிளைமாக்சில் சொல்கிறோம். அது அனைவருக்கும் பயனுள்ள ஒரு மெசேஜாக இருக்கும்’ என்றார்.