Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

4 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் சத்யராஜ் மனைவி: மகள் திவ்யா உருக்கமான பதிவு

சென்னை: பிரபல நடிகர் சத்யராஜின் மனைவி மகேஸ்வரி (66), கடந்த 4 ஆண்டுகளாக கோமாவில் இருந்து வருவதாக, அவரது மகள் திவ்யா சத்யராஜ் ஒரு உருக்கமான பதிவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுகுறித்து திவ்யா சத்யராஜ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ‘இது சிங்கிள் பேரண்ட்கள் அனைவரையும் பாராட்ட வேண்டிய பதிவு ஆகும். கடந்த 4 ஆண்டுகளாக என் அம்மாவான (மகேஸ்வரி)கோமாவில் இருந்து வருகிறார். அவரை எங்கள் வீட்டில் வைத்து நன்கு கவனித்து வருகிறோம். அவருக்கான உணவை டியூப் வழியாக செலுத்தி வருகிறோம். நாங்கள் மனதளவில் உடைந்துவிட்டோம். எனினும் அதிக நம்பிக்கையுடனும், நேர்மறையான எண்ணத்துடனும், மருத்துவ சிகிச்சையால் என் அம்மா குணமடைவார் என்று காத்திருக்கிறோம்.

என் அம்மா பழைய மாதிரி திரும்பவும் கிடைப்பார் என்பது எங்களுக்கு தெரியும். அம்மா கோமாவில் இருப்பதால், அப்பா தனியாளாக குடும்பத்தை சமாளித்து வருகிறார். அவர்தான் எனக்கு தாய்க்கு தாயாக இருக்கிறார். அதுபோல், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பாவின் தாய் (நாதாம்பாள்), அதாவது எனது பாட்டியும் தவறிவிட்டார். இதனால், நானும் அப்பாவுக்கு தாய் போல் மாறிவிட்டேன். நானும், அப்பாவும் சக்திவாய்ந்த தாய்களாக மாறி, ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்திக் ெகாள்கி றோம்’ என் பதாக இப் பதிவு வெளியானவுடன் இணையதளம் முழுக்க வைரலாகி வருகிறது. சத்யராஜ், மகேஸ்வரியின் திருமணம் கடந்த 1979 ஜூன் 7ம் தேதி நடந்தது குறிப்பிடத்தக்கது.