Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

69 வயதில் 65 படங்கள் இயக்கியவர் உதவி இயக்குனர்களுக்கு பி.வாசு லேப்டாப் பரிசு

சென்னை: தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் 40 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் பி.வாசு, தற்போது இயக்கியுள்ள ‘சந்திரமுகி 2’ படம், அவரது டைரக்‌ஷனில் உருவாகியுள்ள 65வது படமாகும். நேற்று முன்தினம் அவரது 69வது பிறந்தநாள். இதையொட்டி, ‘சந்திரமுகி 2’ படக்குழு சார்பில் கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது பி.வாசு தன்னிடம் பணியாற்றும் உதவி இயக்குனர்களுக்கு லேப்டாப் பரிசளித்தார். அவருக்கு ஜி.கே.எம்.தமிழ்குமரன், ராகவா லாரன்ஸ் மற்றும் படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ள ‘சந்திரமுகி 2’ படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனவத், வடிவேலு, ராதிகா, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவிமரியா, சுரேஷ் மேனன், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சுபிக்‌ஷா கிருஷ்ணன், சிருஷ்டி டாங்கே நடித்துள்ளனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, எம்.எம்.கீரவாணி இசை அமைத்துள்ளார். இப்படம் கடந்த 15ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கிராபிக்ஸ் பணிகள் முடிய தாமதமானதால், ரிலீஸ் தேதியை மாற்றி, வரும் 28ம் தேதி உலகம் முழுதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு கொண்டு வருகின்றனர்.