Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஏ.எல். விஜய் இயக்கத்தில் மாதவன்

சென்னை: நீண்ட இடைவெளிக்கு பிறகு காதல் கதை கொண்ட படத்தில் மாதவன் நடிக்கிறார்.ரொமான்டிக் ஹீரோவாக இருந்த மாதவன், தனது வயதுக்கு ஏற்ப ஆக்‌ஷன் கதைகளில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு வித்தியாசமான வேடங்களையும் ஏற்றார். இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் காதல் கதை கொண்ட படத்தில் மாதவன் நடிக்கிறார்.

இந்த படத்துக்கு ‘இதுவும் ஒரு காதல் கதைதான்’ என பெயரிட்டுள்ளனர். ‘கிரீடம்’, ‘தேவி’, ‘தலைவா’, ‘தாண்டவம்’, ‘தெய்வத் திருமகள்’, ‘மதராசபட்டினம்’, ‘மிஷன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய் இப்படத்தை இயக்குகிறார். ஹாரிஸ் ெஜயராஜ் இசையமைக்கிறார். ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.