Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

திடீர் உடல் நலக்குறைவு நவ்யா நாயர் மருத்துவமனையில் அனுமதி

திருவனந்தபுரம்: முன்னணி மலையாள நடிகை நவ்யா நாயர். தமிழில் அழகிய தீயே, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக்கிளிகள், அமிர்தம், மாய கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். திருமணம் செய்து கொண்டு செட்டிலான நவ்யா நாயர் சில வருட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளார். அவர் நடித்து முடித்துள்ள ‘ஜானகி ஜானே’ படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்த படத்தின் புரமோசன் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த பணிகளில் நவ்யா நாயர் கலந்து கொள்ளவில்லை.

அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நவ்யாவின் தோழியும், நடிகையுமான நித்யா தாஸ் அவரை மருத்துவமனையில் சந்தித்த படத்தை வெளியிட்டதன் மூலம் இந்த தகவல் வெளியாகி உள்ளது. படத்தை வெளியிட்டு ‘விரைவில் குணமடையுங்கள்’ என்று அவர் தெரிவித்திருக்கிறார். ‘உடல்நலக்குறைவு காரணமாக ஜானகி ஜானே பட புரமோசனில் கலந்து கொள்ளவில்லை’ என நவ்யா நாயரும் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருக்கிறார். அவருக்கு என்ன மாதிரியான உடல்நல பிரச்னை என்பதை அவர் ெதரிவிக்கவில்லை.