தமிழில் ‘மைனா’ படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த அமலா பால், பல மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் ‘கடாவர்’ படத்தை தயாரித்து நடித்து, பொருளாதார ரீதியில் பலத்த நஷ்டம் அடைந்தார். விஜய் ஜோடியாக ‘தலைவா’ படத்தில் நடித்தபோது, அதன் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்த அமலா பால், 2014ல் அவரை திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்திய அமலா பால், மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று கேட்டபோது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2017ல் கணவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.
2023ல் தொழிலதிபர் ஜெகத் தேசாயை காதல் திருமணம் செய்த அமலா பால், ‘இலை’ என்ற மகனுக்கு தாயானார். தனது மகனுடன் சேர்ந்து அவர் எடுக்கும் போட்டோக்களை தொடர்ந்து பதிவிடுவார். அதன்படி சமீபத்தில் வெளியிட்டுள்ள போட்டோ வைரலாகி வருகிறது. அதில் அவர் தனது மகன் இலையை கொஞ்சி விளையாடி மகிழ்கிறார். அதை பார்த்த நெட்டிசன்கள், ‘அடடே... அமலா பால் மகனா இது? இவ்வளவு சீக்கிரம் வளர்ந்துவிட்டானே!’ என்றும், ‘அப்படியே அமலா பால் போலவே இருக்கிறான்’ என்றும் கமென்ட் வெளியிட்டு வருகின்றனர்.
